×

காங்கோவில் கனமழை: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்தது

கின்ஷாசா: கிழக்கு காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 400-ஐ கடந்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. மேலும், காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்பு பணியை துரிதப்படுத்த தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post காங்கோவில் கனமழை: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்தது appeared first on Dinakaran.

Tags : Congo ,Kinshasa ,eastern Congo ,Dinakaran ,
× RELATED காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை: சுகாதார அவசர நிலை பிரகடனம்